Thursday 4 August 2011

கதாநாயகன் என்றொரு வில்லன்..



இந்த பதிவில் வரும் கதைகள் நிச்சயம் உங்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும்...
தொடர்ந்து இதில் வரும் கதைகளையும் சம்பவங்களையும் படிப்பவருக்கே முடிவும் புரியும்..

உங்களது பின்னூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் 
கதாநாயகன்..

Friday 17 June 2011

துரோகக்கதைகள்...டிரைலர்

 
நித்யாவோட மொபைல் இப்போவெல்லாம் தொடர்ந்து சுவிட்ச் ஆப்லேயே இருக்கு...
அவளும் இப்போ போன் பண்றதும் இல்லை...
 
ஏறக்குறைய ஆறு மாதங்களாகி விட்டது..
நான் எப்படி விட்டேன்...
அபர்ணா...
ஆமாம்..இவளது தொடர்பு ஏற்பட்ட பிறகு ஆவலுடன் பேச அவ்வளவாக ஆர்வம் இல்லை..
இன்று ஏனோ நித்யாவுடன் பேசவேண்டும் போல இருந்தது..
 
அவள் வீட்டு நம்பரை தொடர்பு கொண்டேன்..
குரலை சற்று மாற்றிக்கொண்டேன்...
 
 
"ஹலோ?"
மறுமுனையில் "ஹலோ"
சற்று மௌனித்தேன்..
மீண்டும் மீண்டும் " ஹலோ..ஹலோ?"
எஸ்...இது நித்யாவேதான்..
ஸோ அவள்தான் போனை எடுக்கிறாள்...
துண்டித்தேன்..
மீண்டும் போன் செய்தேன்..
இப்போதும் நித்யாதான்.."ஹலோ..யாருங்க..?
"நிதியா..நான்தான்..!"
என் குரலை அவள் அடையாளம் கண்டுகொண்டாள்.. அதிர்ச்சி அடைவதையும் என்னால் உணரமுடிகிறது..
"ஒ நீயா?
"என்னாச்சு நித்யா..ஏன் என்னை மறந்துட்டே?"
"சிச்சுவேஷன  புரிஞ்சுக்கோ?
"என்ன சிச்சுவேஷன்?"
"எனக்கு நெக்ஸ்ட் மன்த்  மேரேஜ் ஆகப்போகுது?"
ஓஹோ..அப்போ நான்...?"
......
......
"நித்யா?"
"ப்ளீஸ்..இனிமேல் இந்த நம்பருக்கு போன் செய்யாதே?"
"அப்போ உன் மொபைல் நம்பர் கொடு"
"இப்போ என்கிட்டே மொபைல் இல்லை..நம்பர் வந்தவுடன் தர்றேன்..!"
"நித்யா பொய் சொல்லாதே..நான் உன்கிட்டே பேசணும்..."
.......
......
......
"நானே உனக்கு போன் பண்றேன்..ப்ளீஸ்..இனிமேல் லேண்ட் லைனுக்கு பண்ணாதே...!"
அவசரமாக போனை கட் செய்கிறாள்..

Monday 23 May 2011

முதலாம் அத்தியாயம் ! ஒரு அறிமுகம்..!

"நான் அந்த வீட்டுக்கு குடிவந்து ஒருவாரம்தான் ஆகிறது...இரண்டு வீடுகள் தள்ளி அந்த வீடு...ரேணுகாவின் வீடு...

ரேணுகா..அவளுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் இருக்குமா?..

அந்த வீட்டில்தான் இருக்கிறாளா? வெளியே வருவாளா? வந்தால் பார்ப்பாளா? பார்த்தால் பேசுவாளா?

திருமணம் நடைபெற்றதைகூட அவள் என்னிடம் தெரிவிக்கவில்லையே?

ஏன்..நான் ஏதும் வந்து குழப்பம் செய்துவிடுவேன் என்ற பயமா?

தெரியவில்லை..ஆனால் இந்த தடவை அவளை பார்க்க எனக்கு ஆவலாக இருந்தது..

நான் அப்படிப்பட்டவன் அல்ல என்று சொல்லவேண்டும்..
நீ நன்றாக வாழவேண்டும் என்றே விரும்புகிறேன் ரேணுகா என்று சொல்லவேண்டும்...!"



"வெளியே நின்றுகொண்டிருப்பது அவளது அம்மாதான்..அவருக்கு என்னை தெரியும்...பேசிப்பார்ப்போமா...?"

"எப்படி இருக்கீர்கள் அம்மா? "

"நல்ல இருக்கேம்பா! நீ எப்படி இருக்கே..?"

"நான் நல்லா இருக்கேன்..இதோ பக்கத்து வீட்டுக்குத்தான் குடி வந்து இருக்கேன்..!"

"ரேணுகா......"

"அவ இல்லையப்பா...!"

"எங்கே அவங்க ஹஸ்பண்ட்கூடவா..?

இல்லை அவ இறந்துட்டா...தீய வெச்சுகிட்டு தற்கொல பண்ணிகிட்டா...நாலு வருஷம் ஆய்டுச்சு...!"

****

இது ஒரு அறிமுகம்தான்...

இந்தக்கதையில் வரும் நாயகன் ஒருவன்தான்..ஆனால் அவன் வாழ்க்கையில் வரும் பெண்களைப்பற்றியும் அதன் விளைவுகள்பற்றியும் ... இனிமேல்...