Monday 23 May 2011

முதலாம் அத்தியாயம் ! ஒரு அறிமுகம்..!

"நான் அந்த வீட்டுக்கு குடிவந்து ஒருவாரம்தான் ஆகிறது...இரண்டு வீடுகள் தள்ளி அந்த வீடு...ரேணுகாவின் வீடு...

ரேணுகா..அவளுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் இருக்குமா?..

அந்த வீட்டில்தான் இருக்கிறாளா? வெளியே வருவாளா? வந்தால் பார்ப்பாளா? பார்த்தால் பேசுவாளா?

திருமணம் நடைபெற்றதைகூட அவள் என்னிடம் தெரிவிக்கவில்லையே?

ஏன்..நான் ஏதும் வந்து குழப்பம் செய்துவிடுவேன் என்ற பயமா?

தெரியவில்லை..ஆனால் இந்த தடவை அவளை பார்க்க எனக்கு ஆவலாக இருந்தது..

நான் அப்படிப்பட்டவன் அல்ல என்று சொல்லவேண்டும்..
நீ நன்றாக வாழவேண்டும் என்றே விரும்புகிறேன் ரேணுகா என்று சொல்லவேண்டும்...!"



"வெளியே நின்றுகொண்டிருப்பது அவளது அம்மாதான்..அவருக்கு என்னை தெரியும்...பேசிப்பார்ப்போமா...?"

"எப்படி இருக்கீர்கள் அம்மா? "

"நல்ல இருக்கேம்பா! நீ எப்படி இருக்கே..?"

"நான் நல்லா இருக்கேன்..இதோ பக்கத்து வீட்டுக்குத்தான் குடி வந்து இருக்கேன்..!"

"ரேணுகா......"

"அவ இல்லையப்பா...!"

"எங்கே அவங்க ஹஸ்பண்ட்கூடவா..?

இல்லை அவ இறந்துட்டா...தீய வெச்சுகிட்டு தற்கொல பண்ணிகிட்டா...நாலு வருஷம் ஆய்டுச்சு...!"

****

இது ஒரு அறிமுகம்தான்...

இந்தக்கதையில் வரும் நாயகன் ஒருவன்தான்..ஆனால் அவன் வாழ்க்கையில் வரும் பெண்களைப்பற்றியும் அதன் விளைவுகள்பற்றியும் ... இனிமேல்...